சங்கரன்கோவிலில் பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவம்: போலீசார் விசாரணை

சங்கரன்கோவிலில் பள்ளி மாணவர்களிடையே மோதல் சம்பவம். காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2022-02-09 12:30 GMT

கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

சங்கரன்கோவிலில் பள்ளி மாணவர்களிடையே மோதல் சம்பவம் எதிரொலி பள்ளியில் காவல்துறையினர் தீவிர விசாரணை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு அதில் இரண்டு மாணவருக்கு காயம் ஏற்பட்டதால் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களிடையே மோதல் சம்பவத்தை தடுக்கும் பொருட்டு சங்கரன்கோவில் நகர காவல் ஆய்வாளர் தலைமையில் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள், பெற்றோர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் பள்ளியில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.

Tags:    

Similar News