சேதமான பள்ளி கட்டிடம் சீரமைச்சு கொடுங்க: அமைச்சரிடம் எம்எல்ஏ கோரிக்கை

சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடங்களை சீரமைத்து தர பள்ளி கல்விதுறை அமைச்சரிடம் எம்.எல்.ஏ. ராஜா கோரிக்கை வைத்தார்.;

Update: 2021-11-18 05:15 GMT

பள்ளிக் கல்வி அமைச்சரை சந்தித்து, கோரிக்கை மனு அளித்த எம்.எல்.ஏ. ராஜா. 

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து,  சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சேதமடைந்துள்ள மாடி கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும்; சாயமலை அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் வேண்டியும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மராமத்து பணிகள் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 

Similar News