சங்கரன்கோவில் அருகே வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்: எம்எல்ஏ ஆய்வு
சிதம்பராபுரம் கிராமத்தில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா ஆய்வு.;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குருவிகுளம் ஒன்றியம் சிதம்பராபுரம் கிராமத்தில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாமினை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆய்வு செய்தார்.
இம்முகாமில் தோல் சிகிச்சை பிரிவு ,கண் சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, சித்த மருத்துவம் மற்றும் பொது மருத்துவம் சார்ந்த நோயாளிகளுக்கு முழு பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களிடையே சங்கரன்கோவில் சட்டமன்ற ராஜா டாக்டர் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் குருவிகுளம் ஒன்றிய செயலாளர் கடற்கரை, மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் வெற்றி விஜயன், வழக்கறிஞர் ஜெயகுமார், பெரியதுரை, சுந்தரபாண்டியன், கிளை செயலாளர் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.