குடிநீர்த்திட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால் தூசி மண்டலமாக மாறிய சங்கரன்கோயில்

*புகை மண்டலமாக காட்சியளிக்கும் சங்கரன்கோவில் சாலைகள்*

Update: 2021-07-03 15:52 GMT

கூட்டுக்குடிநீர்த்திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால் சங்கரன்கோவில் நகரம் மண்புழுதி மண்டலமாக மாறியதால் பொதுமக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கூட்டுக்குடிநீர் குடிநீர் குழாய் இணைப்பு பணிக்காக பல்வேறு இடங்களில் தோண்டப்பட்டு சாலைகள் சரிவர மூடப்படாததால் சாலையிலிருந்து மண்புழுதி கிளம்பி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது .

இந்நிலையில் திருநெல்வேலி சங்கரன்கோவில் செல்லக்கூடிய நெடுஞ்சாலையில் தாமிரவருணி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்டு தற்போது பணிகள் முடிவுற்ற பகுதிகளில் தார்ச்சாலை அமைக்ககாதாதல் கனரக வாகனங்கள் செல்லும் போது மண் புழுதி கிளம்பி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

கனரக வாகனங்கள் சென்றால் பின்னால் செல்லும் இருசக்கர வாகனங்கள் முன்னே செல்லும் வாகனங்களுக்கு வழி தெரியாமல் தடுமாறும் அளவிற்கு தூசி மண்டலம் தோன்றுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தாமதமின்றி சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

Similar News