சங்கரன்கோவில் சித்திரை திருவிழா: திருத்தேர் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!

சங்கரன்கோவிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

Update: 2024-04-21 10:57 GMT

சங்கரன்கோவிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி சித்திரை பிரமோற்சவ விழா திருத்தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

ஸ்ரீ கோமதி அம்பாள் சமேத ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி சித்திரைப் பிரமோற்சவ விழாவானது நடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் சுவாமி அம்பாள் சிறப்பு பூஜைகளில் 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, அலங்காரத்துடன் மகாதிபராதனையும் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதி உலா நிகழ்வு நான்கு ரத வீதிகளிலும் நடைபெற்று வந்தது. ஒன்பதாவது திருவிழாவான இன்று அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு விநாயகர் சுவாமி அம்பாள் மற்றும் கோமதி அம்பாள் திருத்தேர்களில் எழுத்தருளினர். தற்போது தேரோட்ட நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதலாவதாக சின்னதாக அமைக்கப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்ட விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பின்பு இரண்டாவதாக

சுவாமி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட தேரையும் மற்றொரு அலங்கரிக்கப்பட்ட கோமதி அம்பாள் தேரையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தொடங்கி திருத்தேர் வீதியில் உலா வந்து கொண்டிருக்கிறது. முன்னதாக பஞ்ச வாக்கியங்கள் நிறைந்த சிவனடியார்கள் ஓம் நமச்சிவாயா கோசத்துடன் தேரோட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News