சங்கரன்கோவில் சிட்கோ தொழிற்பேட்டை தொடங்கப்படுமா?
சங்கரன்கோவில் பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள சிட்கோ தொழிற்பேட்டை தொடங்கப்படுமா என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பு.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஒருகிணைந்த திருநெல்வேலி மாவட்டமாக இருந்த போது 25 ஹெக்டேரில் சிட்கோ நிறுவனம் நிறுவ இடம் தேர்வு செய்யபட்டது.
பின்பு அங்கு பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஒரு தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் சட்டபேரவை தேர்தலுக்கு முன்பாக ஆடு ஆராய்ச்சி நிறுவனம் தொடங்க இடம் தேர்வு செய்யபட்டு அதுவும் கிடப்பில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு 16வது சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றியபோது தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை பெருக்கும் நோக்கில் திட்ட குழு அமைக்கப்படும்என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி தற்போது தென்காசி மாவட்டத்தில் உள்ள சிட்கோ நிறுவனத்தில் தொழில் நிறுவனங்கள் தொடங்க புதிய அரசு முயற்சி செய்யுமா? என அப்பகுதி மக்களின் எதிர்பார்பாக உள்ளது.