ஆடித்தபசு திருவிழா: சங்கரநாராயண சுவாமி கோவிலில் பாதுகாப்பு தீவிரம்
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏடிஎஸ்பி கலிவரதன் ஆய்வு செய்தார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். அதன் முக்கிய திருவிழாவாக கருதப்படுவது ஆடித்தபசு திருவிழாவாகும். தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து திருவிழாவில் கலந்து கொள்வது வழக்கம்.
இந்நிலையில், நோய்த் தொற்று பரவ காரணமாக திருவிழா கோவிலுக்குள் இருக்கும் உள் பிரகார விதிகள் நடத்தப்படும் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து, திருவிழா நடக்கும் மண்டகப்படி தாரர்கள் தவிர பக்தர்கள் கூட்டம் போடாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்த ஏடிஎஸ்பி கலிவரதன், செய்தியாளர்களை சந்தித்தபோது பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளதாக தெரிவித்தார். வருகிற 23-ஆம் தேதி ஆடித்தபசு திருவிழா நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.