டிராக்டரில் சென்று ஆய்வு மேற்கொண்ட சங்கரன்கோவில் எம்எல்ஏ
குருவிகுளம் யூனியனுக்கு உட்பட்ட ஆலமநாயக்கர்பட்டி கண்மாய் நிறைந்து, உடைந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
சங்கரன்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்ததையொட்டி, குருவிகுளம் யூனியனுக்கு உட்பட்ட ஆலமநாயக்கர்பட்டி கண்மாய் நிறைந்து, உடைந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த கண்மாய் உடைப்பு சீர் செய்யும் பணியினை அரசு அலுவலர்களை துரிதப்படுத்தி உடனடியாக சீர் செய்யபட்டது.
இதனை தொடர்ந்து சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, ஒன்றிய செயலாளர் சேர்மதுரை, ஒன்றிய வார்டு கவுன்சிலர் சங்கீதா, கணேஷ் குமார், ஊராட்சி மன்ற தலைவர் கனகலட்சுமி ஆகியோரோடு அந்த கண்மாயை டிராக்டரில் சென்று பார்வையிட்டார். மேலும் கரையை வலுப்படுத்துவதற்கு அமைச்சரிடம் கோரிக்கையை சொல்வதாக உறுதியளித்தார். அந்தப் பகுதியை பார்வையிட டிராக்டரை தானே இயக்கி சென்று உடைப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டது கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.