சங்கரன்கோவில் அருகே விவசாயி வீட்டில் பணம் கொள்ளை

சங்கரன்கோவிலில் வீட்டில் யாரும் இல்லாதபோது விவசாயி வீட்டுக்குள் புகுந்து பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2021-07-04 06:44 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்கொண்டார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராமையா மகன் முருகைய்யா வயது 58 விவசாயி.  முருகைய்யா விவசாய வேலைக்காக சென்றபோது அவரது வீட்டை திறந்து வீட்டின் பீரோவில் இருந்த ரூபாய் 30ஆயிரம்  பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து முருகைய்யா சின்ன கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் புகார் கூறினார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News