விவசாயிகளுக்கு இலவசமின்சாரம் - பணியில் உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கல்

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குதல் மற்றும் பணியின் போது உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டது;

Update: 2021-10-18 14:45 GMT

சங்கரன்கோவிலில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும்  விழா

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குதல் மற்றும் பணியின் போது உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி சங்கரன்கோவிலிவ் நடைபெற்றது.

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குதல் மற்றும் பணியின் போது மரணம் அடைந்தோரின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழாவுக்கு   தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமை வகித்தார். சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா அவர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வே‌.விஷ்ணு ,தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் , திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மற்றும் திருநெல்வேலி வட்டத்திற்கு உட்பட்ட மின்பகிர்மான பணியாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News