சங்கரன்கோவிலில் வெவ்வேறு சம்பவம்: இரண்டு பெண்கள் தற்கொலை!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை செய்துகொண்டனர்.;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராம சமயபுரம் தெருவை சேர்ந்த ராமர் மனைவி மாரியம்மாள் (வயது 56) . இவர் சம்பவத்தன்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சங்கரன்கோவில் டவுன் போலீசார் மாரியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாரியம்மாள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி தகவல் டவுன் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இதேபோல் சங்கரன்கோவில் சபாபதி நகரைச் சேர்ந்த மூர்த்தி மனைவி கனி அம்மாள் ( 33). கன்னியம்மாள் வீட்டில் உள்ள ஹேர்டை குடித்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அவரது உறவினர்கள் சங்கங்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கனி அம்மாள் பரிதாபமாக உயிர் இழந்தார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி சங்கரன்கோவில் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.