சங்கரன்கோவில்: சுயேட்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு

சங்கரன்கோவிலில் வார்டுகளில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம் வழங்கப்பட்டது.

Update: 2022-02-07 16:30 GMT

சங்கரன்கோவிலில் வார்டுகளில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம் வழங்கப்பட்டது.

சங்கரன்கோவிலில் வார்டுகளில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம் வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட முப்பது வார்டுகளில் அரசியல் கட்சியினர், சுயேட்சையாக போட்டியிடும் நபர்கள் உட்பட 170பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். அதில் இன்று சுயேட்சை வேட்பாளர்கள் 14பேர் வேட்பு மனுவை திரும்ப பெற்றனர். மீதமுள்ள 146பேரில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கப்பட்ட சின்னங்கள் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களில் ஒரே சின்னம் இரண்டு வேட்பாளர்கள் கேட்டால் அவர்களுக்கு பெயர் எழுதி குலுக்கல் முறையில் தீப்பெட்டி, வைரம், தென்னைமரம், அரிகன் விளக்கு உள்ளிட்ட சின்னங்கள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News