கரிவலம்வந்தநல்லூர் ஆற்றில் மணல் கடத்தல்: அதிகாரிகள் உடந்தையோடு நடப்பதாக குற்றச்சாட்டு

சங்கரன்கோவில் அருகே உள்ள ஆற்றில் நள்ளிரவில் மணல் கடத்தல். அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றசாட்டு.

Update: 2021-12-24 15:30 GMT

ங்கரன்கோவில் அருகே உள்ள ஆற்றில் மணல் கடத்துவதற்காக ஜேசிபி இயந்திரங்கள், லாரிகள் செல்ல அமைக்கப்பட்டுள்ள பாதை.

சங்கரன்கோவில் அருகே உள்ள ஆற்றில் நள்ளிரவில் ஜேசிபி இயந்திரங்களின் உதவியுன் மணல் கடத்தல். காவல்துறையினர், வருவாய்துறையினர் உடந்தையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றசாட்டு.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் நிட்சேப நதியில் ஆற்றில் கடந்த பத்து ஆண்டுகள் கழித்து இந்தாண்டு மேற்குதொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்த மழையினால் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. அதனையும் மணல் மாபியா கும்பல்கள் பொருட்படுத்தாமல் நள்ளிரவில் தண்ணீர் செல்லக்கூடிய ஆற்றில் ஜேசிபி, கிட்டாச்சி இயந்திரங்களை கொண்டு லாரிகள் மூலமாக மூன்று நாட்களாக நள்ளிரவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மணல்கள் அள்ளி செல்லப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக கரிவலம்வந்தநல்லுர் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் அலட்சியத்துடன் பதில் அளித்து மணல் அள்ளும் கும்பல்களுக்கு உடந்தையாக செயல்பட்டு வருவதாக அப்பகுதி கிராம மக்கள் குற்றாட்டுகின்றனர்.

எனவே நள்ளிரவில் ஜேசிபி, கிட்டாச்சி, லாரிகள் மூலமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் நபர்கள் அதற்கு உடந்தையாக செயல்பட்டு வரும் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும்.

Tags:    

Similar News