தென்காசி மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை: கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்
தென்காசி மாவட்டத்தில் மணல் கொள்ளை வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக மணல், கல், என கனிம வள கொள்ளை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் புகார் கொடுக்கும் எவ்வித நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலத்திற்கு 2000க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படும் வீடியோ வைரலாக பரவி வந்தது.
இதனால் பல இடங்களில் சமூக நல அமைப்புகள் போராட்டம் நடத்தியது. தொடர்ந்து வருகின்ற 28ஆம் தேதி ஆலங்குளத்தில் தேமுதிக சார்பில் கலிமாவளப் கொள்ளையை கண்டு கொள்ளாத அரசை கண்டித்து பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தற்போது சுரண்டை அருகே உள்ள சேர்ந்த மரத்தில் கடந்த சில நாட்களாக டிராக்டரில் ஓடைப்பகுதியில் உள்ள மணல்கள், மற்றும் ஜல்லிகள் போன்றவற்றை கடத்தி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.