ஊரக உள்ளாட்சி தேர்தல்: சங்கரன்கோவில் பகுதிகளில் அமமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் அமமுகவினர் ஈடுபட்டுள்ளனர்.;
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் அமமுகவினர் ஈடுபட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களான துரைச்சி, வள்ளிநாயகம் ஆகியோர்களை ஆதரித்து மாவட்டச் செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் இருமன்குளம், வடக்குபுதூர், வீரிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிக்க வந்த அமமுகவினருக்கு கிராம மக்கள் மேளதாளங்கள் முழங்க சிறுவர்கள் நடனமாடி மிகுந்த உற்சாகத்துடன் பெண்கள் குலவையிட்டு வரவேற்பு அளித்தனர்...