சங்கரன்கோவிலில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையாேர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் இருநூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர வியபாரிகள் குடும்பத்துடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம்.;
சங்கரன்கோவில் சாலையோரம் வியபாரம் செய்யும் வியபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் இருநூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர வியபாரிகள் குடும்பத்துடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 300க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள் வியாபாரம் செய்து அதில் வரும் வருமானத்தை கொண்டு குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
அவர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் விதமாக சங்கரன்கோவில் நகராட்சி நிர்வாகத்தினர் வாடகையும் வாங்கிக்கொண்டு அப்புறப்படுத்தி வருவதால் ஆத்திரமடைந்த சாலையோர வியாபாரிகள் 200க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் தலைமையில் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.