புகை மண்டலமாக காட்சியளிக்கும் சங்கரன்கோவில் சாலைகள்

சங்கரன்கோவிலில் சாலைகள் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.;

Update: 2021-07-05 16:47 GMT

புகை மண்டலமாக காட்சியளிக்கும் சங்கரன்கோவில் சாலைகள்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் இணைப்பு பணிக்காக பல்வேறு இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு மூடப்பட்டுள்ளது. இதனால் சாலையிலிருந்து புழுதி கிளம்பி புகை மண்டலமாக அவ்வபோது காட்சியளிக்கிறது.

இந்நிலையில் திருநெல்வேலி - சங்கரன்கோவில் செல்லக்கூடிய நெடுஞ்சாலையில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. ஆனால் அப்பகுதியில் சாலைகள் அமைக்காததால் கனரக வாகனங்கள் செல்லும் போது புழுதி, தூசிகள் கிளம்பி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

வாகனங்கள் சென்றால் பின்னால் வரும் இருசக்கர வாகனங்கள் முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடி யாக சாலையை சரிசெய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News