குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரால் நோய் தொற்று பரவும் அபாயம்: பாெதுமக்கள் அச்சம்
சங்கரன்கோவில் பகுதிகளில் பெய்த மழையினால் கழிவுநீருடன் சேர்ந்து மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்து துர்நாற்றம்.
சங்கரன்கோவில் பகுதிகளில் பெய்த மழையினால் கழிவுநீருடன் சேர்ந்து மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்து துர்நாற்றம். நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதிகளில் நள்ளிரவில் பெய்த மழையினால் இரயில்வே குடியிருப்பு, ஏவிஆர் காலனி ஆகிய பகுதிகளில் மழை நீருடன் சாக்கடை கழிவு நீர் கலந்து குடியிப்புகளை சூழந்துள்ளதால் அப்பகுதியில் உள்ள பள்ளி, மருத்துவமனைக்கு செல்வோர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள கழிநீரானது துர்நாற்றம் வீசி வருவதால் தொற்று நோய் பரவும் அச்சம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் உட்பட அனைத்துதுறை சார்ந்த அதிகரிகளிடம் தெரிவித்தும் தற்போது வரை கழிவு நீரை அகற்றுவதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள தண்ணீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குடியிருப்புவாசிகளின் கோரிக்கையாகும்.