சங்கரன்கோவிலில் தவறிய குழந்தை புளிங்குடி பேருந்து நிலையத்தில் மீட்பு

சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் தவறிய குழந்தையை புளிங்குடி பேருந்து நிலையத்தில் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு.;

Update: 2021-09-14 05:30 GMT

சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் தவறிய குழந்தையை புளிங்குடி பேருந்து நிலையத்தில் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த காவல்துறையினர்.

சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் தவறிய குழந்தையை புளிங்குடி பேருந்து நிலையத்தில் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த காவல்துறையினரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

திருச்சியை சேர்ந்த பாத்திமா என்பவர் அவரது குடும்பத்தினருடன் தென்காசி மாவட்டம் வீரணம் கிராமத்திற்கு துக்க நிகழ்விற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு வந்திருந்தனர். அதனை முடித்து விட்டு நேற்று மறுபடியும் திருச்சி செல்வதற்கு வீரணம் கிராமத்தில் இருந்து குடும்பத்துடன் சங்கரன்கோவில் வந்தனர்.

அப்போது பாத்திமாவின் ஐந்து வயது குழந்து பேருந்து நிலையத்தில் தென்காசி செல்லக்கூடிய பேருந்தில் ஏறியது. பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துடன் குழந்தை யார் என்று தெரியாததால் புளியங்குடியில் உள்ள பேருந்து நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். உடனடியாக புளியங்குடி காவல்துறையினர் சங்கரன்கோவில் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து பாத்திமா குழந்தையை காணவில்லை என நகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க உங்களுடைய ஐந்து வயது குழந்தை பானு புளியங்குடி காவல்நிலையத்தில் பத்திரமாக உள்ளது என கூறினார்கள். விரைந்து சென்ற குடும்பத்தினர் குழந்தையை மகிழ்ச்சியுடன் பெற்று காவல்துறையினர் மற்றும் பேருந்து ஓட்டுநர், நடத்துனருக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News