சங்கரன்கோவிலில் இராமகோபாலன் பிறந்தநாள்: இந்து முன்னணியினர் மரியாதை

இந்து முன்னணி நிறுவனர் இராமகோபாலனின் பிறந்தநாள் விழாவை, இந்து எழுச்சி விழாவாக இந்து முன்னணியினர் கொண்டாடினர்.;

Update: 2021-09-19 07:45 GMT

காலஞ்சென்ற இராமகோபாலனின் பிறந்தநாளை முன்னிட்டு,  சங்கரன்கோவிலில் இந்து முன்னணியினர் மலர் தூவி மரியாதை செய்தனர்.

இந்து முன்னணி நிறுவனரான, காலஞ்சென்ற இராமகோபாலனின் பிறந்த நாள் விழா, இந்து எழுச்சி நாளாக இந்து முன்னணியினர் இன்று கொண்டாடி வருகின்றனர். அவ்வகையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர் இந்து முன்னணி சார்பில் காரியாலயம் முன்பு, இந்து முன்னணியினர் பிறந்த நாளை கொண்டாடினர்.

இதையொட்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில், இராமகோபாலனின் திருவுருப படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர்..இதில் சங்கரன்கோவில் நகர் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News