சங்கரன்கோவில் அருகே பொதிகை நகரில் புகுந்த மழை நீர்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பொதிகை நகரில், மழை நீர் புகுந்ததால், மக்கள் அவதிக்குள்ளாகினர்.;

Update: 2021-12-06 11:30 GMT

குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீர். 

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், கோவில்பட்டி சாலையில் அமைந்துள்ளது பொதிகை நகர். இந்த நகரில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு சங்கரன்கோவில் பகுதிகளில் தொடர் மழை பெய்தது.

இந்த மழையினால்,  பாட்டக்குளம் மதகு வழியாக மழைநீர் வெளியேறி வருகிறது. வெளியேறும் மழை நீர்,  செல்வதற்கு  வழி இல்லாததால்,  பொதிகை நகர் பகுதிகளில் தேங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதியடைந்தனர். இதனை தொடர்ந்து யூனியன் அலுவலர்களும், வருவாய் துறையினரும் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News