கோடை காலத்தில் பொதுமக்கள் தாகம் தணிக்க அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யபட்ட நீர் மோர் பந்தலை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு கக்கன் நகர் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு அமைச்சர் ராஜலட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேருந்து நிலையம் எதிரே அதிமுக சார்பில் கோடை காலத்தில் பொது மக்கள் தாகம் தணிக்க நீர் மோர் பந்தலை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர்,தர்பூசணி,இளநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார். இதனை ஏராளமான பொது மக்கள் வாங்கி சென்றனர்.