விளையாட்டு நடத்த எதிர்ப்பு: வட்டாட்சியர் அலுவலத்தின் முன் ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவில் அருகே விளையாட்டு போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
விளையாட்டு போட்டி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்பட்டோர் திருவேங்கடம் வட்டாட்சியர் அலுவலத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குறிஞ்சாங்குளம் கிராமத்தில், விளையாட்டு போட்டி நடத்துவதற்கு ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில், விளையாட்டு போட்டிகள் காவல்துறையினரின் பாதுகாப்போடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு பிரிவை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ஆண்கள்- பெண்கள், திருவேங்கடம் வட்டாட்சியர் அலுவலத்தின் முன்பு, போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சட்டம், ஒழுங்கு பிரச்சனை வராமல் தடுப்பதற்கு வட்டாட்சியர் அலுவலத்தை சுற்றி 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.