அப்துல்கலாம் பிறந்தநாளில் சிறந்த ஓவியங்கள் வரைந்த மாணவர்களுக்கு பரிசு

அப்துல்கலாம் ஓவியத்தை சிறப்பாக வரைந்த மாணவர்களுக்கு பசியில்லா சங்கரன்கோவில் அமைப்பினர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.;

Update: 2021-10-15 16:00 GMT

ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் பசியில்லா சங்கரன்கோவில் அமைப்பினர். 

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவத்தை சிறப்பாக ஓவியமாக வரைந்த மாணவர்களுக்கு பசியில்லா சங்கரன்கோவில் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பசியில்லா சங்கரன்கவில் சார்பாக Dr APJ அப்துல்கலாமின் 90 வது பிறந்த நாளை முன்னிட்டு நடந்த ஓவிய போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா பசியில்லா சங்கரன்கோவில் அறக்கட்டளை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

அப்துல் கலாம் உருவத்தை சிறப்பாக வரைந்த பள்ளி மாணவர்களான மதன், லாரன்ஸ், முருகேஸ்வரி, ஸ்ரீமதி பிரியங்கா, சதுரித்தன், பொன் சிவராஜன், தங்கப்பாண்டி, ப்ரீத்தி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன மேலும் ஆறுதல் பரிசாக முத்துச்செல்வம்,  காருண்யா, ஸ்ரீநிதி திலகவதி ஆகியோர்க்கு வழங்கப்பட்டது. விழாவில் சந்தானகுமார், தலைமை ஆசிரியர், மற்றும் MS தட்டச்சு பள்ளி உரிமையாளர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 12 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News