திசையன்விளையில் பிரியங்கா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பிரியங்கா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி பிறந்த நாள் விழா நகர காங்கிரஸ் தலைவர் ஏ.வி.ஜெ.ஆல்பர்ட் தலைமையில் நடைபெற்றது. நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விவசாய அணி மாநில செயலாளர் விவேக் முருகன் ,மாவட்ட துணைத் தலைவர் ஜார்ஜ் ,மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவி அமுதா கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாவட்ட சிறப்பு அழைப்பாளர் விஜய பெருமாள் ,ஓ.பி.சி .பிரிவு நகர தலைவர் சாமில் ராஜா ,மாவட்ட இணைச் செயலாளர் ஐசக் ,கிராம காங்கிரஸ் தலைவர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு லட்டு வழங்கப்பட்டது. மாவட்ட தலைவர் பிரியங்கா காந்தி செயல்பாடுகள் (தியாகம், வீரம்) குறித்து உரையாற்றினார். பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி பாதுகாப்பிற்காகவும் சுகவாழ்வுக்காகவும் பிரார்த்தனை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும் தமிழக சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் முதலமைச்சரின் பிரயாணத்தின் போது முன்னால் சைரன் அடிப்பதை நிறுத்த சொல்லி ஆணையிட்டது பெருந்தலைவர் காமராஜர் , என்பதை மறைத்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்ற தவறான தகவலை பதிவிட்டார். அமைச்சர் துரைமுருகன் பேச்சைக் கண்டித்தும் , மேற்படி பேச்சை அவைக்குறிப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும்சிறப்பு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. தாமதமாகும் பட்சத்தில் தொடர் போராட்டங்கள் அறவழியில் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டது. கூட்ட முடிவில் ராஜீவ் விக்டர் நன்றி கூறினார்.