சங்கரன்கோவில் அருகே கொட்டும் மழையில் நந்தி பெருமானுக்கு அபிஷேகம்
சங்கரன்கோவில் அருகே கொட்டும் மழையில் நந்தி பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது.;
சங்கரன் கோயில் அருகே சாயமலை ஈஸ்வரன்கோயிலில் கொட்டும் மழையில் நந்தியம்பெருமானுக்கு அபிஷேகம் நடந்தது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சாய மலை அருள்மிகு உமையொருபாக ஈஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள நந்தியம் பெருமானுக்கு விபூதி, சந்தனம், பால், இளநீர், பன்னீர், திரவியம், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களுடன் கொட்டும் மழையிலும் அபிஷேகங்களுடன் தீபாராதனை நடைபெற்றது.