அரசு கால்நடை மருத்துவமனையில் விஷ பூச்சிகள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
சங்கரன்கோவில் அரசு கால்நடை மருத்துவமனை வளாகத்தில் விஷப் பூச்சிகள் அதிக அளவில் நடமாடுவதால் பொதுமக்கள் அச்சம்.;
புதர் மண்டிக் கிடக்கும் சங்கரன்கோவில் அரசு கால்நடை மருத்துவமனை வளாகம்.
சங்கரன்கோவில் அரசு கால்நடை மருத்துவமனை வளாகத்தில் விஷக் கிருமிகளும் பாம்புகளும் அதிக அளவில் நடமாடுவதாலும் அங்கு இருந்து குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுவதால் பொதுமக்கள் அச்சம்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனை தெரு பகுதியில் கால்நடை அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே இந்த மருத்துவமனை வளாகம் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை வளாகம் பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால் அதிகளவில் செடிகளும் புதர்களும் அந்த வளாகத்தில் வளர்ந்து இருப்பதாலும் இங்கே விஷக்கிருமிகள் மற்றும் பாம்புகள் தஞ்சம் புகுந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட பாம்புகள் அந்த வளாகத்தில் சுற்றி திரிவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இங்கிருந்து அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் பாம்பு புகுவதால் பெண்களும் குழந்தைகளும் மிகுந்த அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். உடனடியாக இந்த பகுதியில் சுற்றித் திரியும் பாம்புகளை பிடித்து விட்டு அந்த கால்நடை அரசு மருத்துவமனையை சுத்தப்படுத்த வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.