சிவகிரி அருகே ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தவர் கைது
சிவகிரி அருகே ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள உள்ளார் பகுதியை சேர்ந்தவர் அருணாசல பாண்டியன் மகன் துரைமுருகன்(33). இவர் தெற்கு ஒத்தகடை அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தாக சிவகிரி போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.