ஆபத்தான குடிநீர் தொட்டியை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Public Protest -சங்கரன்கோவிலில் ஆபத்தான குடிநீர் தொட்டியை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-13 05:24 GMT

பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போலீசார்.

Public Protest - தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பஞ்சாயத்து யூனியன் உட்பட்ட செண்பகாபுரம் கிராமத்தில் ஆபத்தான நிலையில் பள்ளி கட்டிடத்தின் அருகே உள்ள குடிநீர் தொட்டியை அகற்றக் கோரி செண்பகாபுரம் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சங்கரன் கோவில் ராஜபாளையம் சாலையில் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட ஊர் பொதுமக்களை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு சங்கரன்கோவில் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் ராஜபாளையம் சாலையில் சிரிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News