சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த மயில்; தீயணைப்புத்துறையினர் மீட்பு
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த மயிலை இறந்த நிலையில் மீட்ட தீயணைப்புத்துறையினர்.;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரது கிணற்றில் மயில் ஒன்று தவறுதலாக விழுந்து தத்தளித்து கொண்டிருப்பதாக சங்கரன்கோவில் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் செல்வதற்கு முன்பாக இறந்து விட்டது. பின்னர் அதனை மீட்டதில் ஆண் மயில் என தெரியவந்தது.
இது சம்பந்தமாக வனத்துறையினருக்கு தீயணைப்புத்துறைனர் தகவல் கொடுத்தனர். பின்னர் ஆழமான குழியில் போட்டு தீயணைப்புத்துறையினரே புதைத்தனர்.