குருவிகுளம் ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கக்கோரி, குருவிகுளம் ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவர்கள், தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Update: 2021-11-19 00:30 GMT

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த, குருவிகுளம் ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவர்கள் .

தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஒன்றியத்தில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தலைமை அரசு மருத்துவமனையாக உயர்த்த பட உள்ளது. இதனால், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நிர்வாகம்,  சாயமலை கிராமத்திற்கோ அல்லது  கலிங்கப்பட்டி கிராமத்திற்கோ மாற்றப்படுவதாக தகவல் வெளியானது. இதன் அடிப்படையில், அப்பகுதியை சேர்ந்த வாகைக்குளம், பழங்கோட்டை, அத்த்திபட்டி, மலிங்காபுரம், வடக்கு குருவிகுளம், சேவல்குளம், சிதம்பராபுரம், கே.ஆலங்குளம், தெற்கு குருவிகுளம், ஆலமநாயக்கர்பட்டி  ஆகிய பத்து  ஊராட்சிகளுக்கு  உட்பட்ட 30 கிராமங்களை சேர்ந்த மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதனால், அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிரதிநிதியான ஊராட்சி மன்றத் தலைவரிடம், பொதுமக்கள் மனுக்களை அளித்துள்ளனர். ஏனென்றால் இந்நிர்வாகம் மாறும் பட்சத்தில் இப்பகுதிகளை சேர்ந்த பிரசவமான தாய்மார்களும், தடுப்பூசி செலுத்தும் குழந்தைகளும் கலிங்கபட்டிக்கு (28கிமீ), சாயமலைக்கு (17கிமீ) தொலைவிற்கு அலைய வேண்டிய நிலை ஏற்படும்.

இதனை கண்டித்தும், மக்களின் நலனை கருத்தில் கொண்டு, இப்பகுதியின் 5 கி,மீ,  தொலைவுக்குள்  புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என்று, மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து, ஊராட்சி மன்றத் தலைவர்கள்  மனு அளித்தனர். இவர்களுடன் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர் சார்பாக ஒருங்கிணைப்பாளர் செ.ராஜேந்திரன் பழங்கோட்டை முன்னிலையில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வட்டார செயலர் அழகை கண்ணன, சமூக ஆர்வலர்கள் வாகை குளம் செ. குமார், வாகை குளம் பி.எம்.முத்துபாண்டி, வடக்கு அழகு நாட்சியாபுரம் அமோஸ், வடக்கு அழகு நாட்சியாபுரம் இராஜராஜ பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News