பள்ளிகள் திறப்பு: சங்கரன்காேவில் அரசு பள்ளியில் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்
செப். 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பதையொட்டி சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்.;
செப். 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பதையொட்டி சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுத்தம் செய்யும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதிஅம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அறுபது ஆண்டுகளுக்கு மேலான பழமையான பள்ளியாகும். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தொற்று குறைந்து வருவதால் செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து பள்ளிகளை திறக்க தமிழகஅரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதணை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் சுகாதாரத்துடன் கல்வி கற்கும் வகையில் வகுப்பறைகள், குடிநீர், மின்விளக்குகள், பேன், கழிப்பிட உள்ளிட்ட அனைத்தையும் சுத்தம் செய்யும் பணியில் தலைமையாசிரியர் தலைமையிலான ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
செப்டம்பர் 1ம் தேதியன்று ஒன்பதாம் வகுப்பு முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர தமிழக பள்ளிக்கல்விதுறை அனுமதியளித்துள்ளதால். அதன்படி பள்ளிக்கு வரக்கூடிய அனைத்து மாணவர்களையும் இரண்டாக பிரித்து எந்தெந்த நாட்கள் வரவேண்டும் என்பதை அன்று முடிவு செய்யப்படும் என பள்ளியின் தலைமையாசிரியர் பார்த்திபன் தெரிவித்தார்.