வள்ளியூரில் வேளாண்மை கூட்டுறவு சங்க மருந்தகம் திறப்பு

வள்ளியூரில் வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் மருந்தகம் திறக்கப்பட்டது.;

Update: 2021-12-16 12:15 GMT

வள்ளியூரில் வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் மருந்தகம் திறக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் நேற்று தமிழ் நாடு கூட்டுறவு  சங்கங்களின் சார்பில் கூட்டுறவு மருந்து கடைகளை  காணொளி காட்சி மூலம்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிலையில் காலை வள்ளியூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள இராதாபுரம் நாங்குநேரி தாலுகாக்கள் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் கூட்டுறவு மருந்துகடையின் கிளையை திருநெல்வேலி கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அழகிரி தலைமையில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் குத்து விளக்கேற்றி  துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில்  வள்ளியூர் ஒன்றிய பெருந்தலைவர் சேவியர் செல்வராஜா மாவட்ட பஞ்சாயத்து  கவுன்சிலர்கள்  பாஸ்கர் ஜான்ஸ்வரூபா,  லிங்கசாந்தி ஒன்றிய கவுன்சிலர் மல்லிகாஅருள், வள்ளியூர் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனர் மன்ன ராஜா, மேலாளர் தமிழ்செல்வம் நகர செயலாளர் வீ.எஸ் சேதுராமலிங்கம், வள்ளியூர் நம்பி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News