சங்கரன்கோவிலில் தொடரும் மோதல் சம்பவம்: மாணவர்களுடன் போலீசார் கலந்துரையாடல்
சங்கரன்கோவிலில் தொடரும் பள்ளி மாணவர்களிடையே மோதல் சம்பவம். காவல்துறையினர் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினர்.;
சங்கரன்கோவிலில் தொடரும் பள்ளி மாணவர்களிடையே மோதல் சம்பவம். தடுப்பதற்கு காவல்துறையினர் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பபட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மாணர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு மோதலில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருவதால் அதனை தடுப்பதற்கு காவல்துறையினர் பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த வாரம் காவல்துறையினர் மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய நிலையில் இன்று தென்காசி மாவட்ட கூடுதால் காவல்கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையிலான காவல்துறையினர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினர். இதில் பள்ளியின் தலைமையாசிரியர் பார்த்திபன் உட்பட அனைத்து ஆசிரியர் பெருமக்கள் உட்பட மாணவர்கள் கலந்துகொண்டனர்.