சங்கரன்கோவில் ஊரடங்கு விதிமுறை உத்தரவை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு சீல் வைப்பு
சங்கரன்கோவில் கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்.
சங்கரன்கோவில் அரசு விதிமுறை உத்தரவை மீறி திறக்கப்பட்ட 20க்கும் மேற்ப்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில் அரசு விதிமுறை உத்தரவை மீறி திறக்கப்பட்ட ஜவுளிக்கடை டீக்கடை உள்ளிட்ட 20க்கும் மேற்ப்பட்ட கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் கடையை மூடி சீல் வைத்தனர்.