உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு பதவிபிரமாணம்

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 48 கவுன்சிலர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்;

Update: 2021-10-20 07:45 GMT

கவுன்சிலர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா பதவி பிரமாணம் செய்து வைத்தார்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலிதநல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றித்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற சங்கரன்கோவிலில் 14திமுக-வும், ஒரு அதிமுக. இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 17பேருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதே போல் மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் 11திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியும் ஒரு சுயேட்சை வேட்பாளர் உள்ளிட்ட 12கவுன்சிலர்களுக்கு ஊராட்சி உதவி இயக்குநர் பிரான்சிஸ் மகராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதனை தொடர்ந்து குருவிகுளம் ஒன்றியத்தில் ஏழு இடங்களில் மதிமுக, ஒரு அமமுக, ஒரு காங்கிரஸ், ஒரு சுயேட்சை. ஏழு இடங்களில் திமுக உட்பட 17கவுன்சிலர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

Tags:    

Similar News