ஏர்வாடியில் நெல்லை புறநகர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ.கட்சி செயற்குழு கூட்டம்

எஸ்.டி.பி.ஐ.கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் ஏர்வாடியில் நடைபெற்றது.;

Update: 2021-12-27 11:45 GMT

எஸ்.டி.பி.ஐ.கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் ஏர்வாடியில் நடைபெற்றது.

எஸ்.டி.பி.ஐ.கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் ஏர்வாடியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எம். கே.பீர்மஸ்தான் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாவட்ட துணைத்தலைவர் எம். எஸ்.சிராஜ், மாவட்ட செயலாளர்கள் கல்லிடை சுலைமான், முல்லை மஜித், அம்பை தொகுதி தலைவர் சேரை அபுபக்கர், ராதாபுரம் தொகுதி தலைவர் துலுவை தவ்பிக், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் அம்பை ஜலீல், நாங்கு நேரி தொகுதி செயலாளர் ஏர்வை ஆசீக், துணை செயலாளர் சேக், பொரு ளாளர் ஹாலித், ஏர்வை நகர தலைவர் அன்வர் முகைதீன், களக்காடு நகர தலைவர் கமாலுதீன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நெல்லை புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட நகராட்சி, பேரூ ராட்சி பகுதிகளில் அதிகமான இடங்களில் போட்டியிடுவது, நாங்குநேரி, ராதாபுரம், சேரன்மகாதேவி, அம்பை, திசையன்விளை ஆகிய தாலுகா அலுவலகங்களில் பொதுமக்களுக்கு தேவையான சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பொதுச் செயலாளர் களந்தை மீராசா நன்றி கூறினார்.

Tags:    

Similar News