சாயமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயற்கை மருத்துவ முகாம்

சாயமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு யோகா மற்றும் இயற்கை மருத்துவ முகாம் நடைபெற்றது.;

Update: 2021-12-21 12:00 GMT

சாயமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு யோகா மற்றும் இயற்கை மருத்துவ முகாமில் நோய் எதிர்ப்பு மூலிகை கசாயம் வழங்கப்பட்டது.

சாயமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு யோகா மற்றும் இயற்கை மருத்துவ முகாமில் நோய் எதிர்ப்பு மூலிகை கசாயம் வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட குருவிகுளம் ஒன்றியம் சாயமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு யோகா மற்றும் இயற்கை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அப்பகுதி மக்களுக்கு இயற்கை மருத்துவ நோய் எதிர்ப்பு மூலிகை கசாயம் வழங்கப்பட்டது.

இதில் குருவிகுளம் 16வது வார்டு சாயமலை ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலர் கண்ணன் மற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர் ஆறுமுகராஜ் ஆகியோர் அப்பகுதிக்கு வந்த கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு இயற்கை மருத்துவ நோய் எதிர்ப்பு மூலிகை கசாயத்தை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மருத்துவ உதவியாளர் தங்கப்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கசாயத்தை வழங்கினர்.

Tags:    

Similar News