சங்கரன்கோவில் பகுதி அங்கன்வாடி மையங்களில் தேசிய குடற்புழு வாரம்
சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் தேசிய குடற்புழு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.;
சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் தேசிய குடற்புழு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர், குருவிகுளம், வாசுதேவநல்லூர், சிவகிரி போன்ற பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் தேசிய குடற்புழு வாரம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி குழந்தைகளுக்கு குடற்பூழு மாத்திரை வழங்கப்படுகிறது.
இந்த குடற்புழு மாத்திரையானது மூன்று மாத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு வழங்கப்படுவதாக அங்கன்வாடி ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும் குழந்தைகள் குடற்புழு மாத்திரை சாப்பிடுவதானல் வயிறு சம்பந்தமான அனைத்து உபாதைகளில் இருந்து தப்பித்து குழந்தைகள் நலமுடன் வாழ்வதற்கு வழிவகை செய்ய கூடியதாகும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.