மருத்துவ கழிவுகளை தீயிட்டு காெளுத்திய மர்ம நபர்கள்: பாெதுமக்கள் அச்சம்

சங்கரன்கோவில் ரயில் நிலையம் அருகே குப்பைகிடங்கில் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவ கழிவுகளை தீ வைத்த மர்ம நபர்கள்.;

Update: 2021-08-24 07:15 GMT

சங்கரன்கோவில் ரயில் நிலையம் அருகே குப்பைகிடங்கில் மர்ம நபர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டு பாதி எரிந்த நிலையில் கிடக்கும் மருத்துவ கழிவுகள்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் இரயில் நிலையம் எதிரே உள்ள குடியிருப்பு அருகே உள்ள குளத்தில் அரசு மருத்துவமனையில் உள்ள மாத்திரைகள், ஊசி உட்பட பல்வேறு வகையான மருந்துப்பொருட்களை குப்பையில் கொட்டி தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்களால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதனை தொடாந்து தனியாருக்கு சொந்தமான நெல்லை மருத்துவ கழிவுகளை சேகரித்து விரயம் செய்யும் நிறுவன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாதியில் தீ எரிந்த நிலையில் உள்ள அனைத்து மருத்துவ பொருட்கள் அனைத்தையும் சேகரித்து கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மருந்து பொருட்கள் அனைத்தும் குப்பையில் கொட்டி தீயிட்டு கொளுத்திய சம்பவம் குடியிருப்பு வாசிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது

Tags:    

Similar News