விற்பனையில் போட்டா போட்டி-மட்டன் கடைகளில் அதிரடி விலை குறைப்பு: மக்கள் மகிழ்ச்சி
அம்பை அருகே இரண்டு மட்டன் கடைகளில் போட்டி போட்டு விலை குறைப்பு செய்ததால் மக்கள் மகிழ்ச்சியோடு மட்டன் வாங்கிச்சென்றனர்.
அம்பை அருகே இரண்டு மட்டன் கடைகளில் போட்டி போட்டு விலை குறைப்பு செய்ததால் மக்கள் குஷியோடு மட்டன் வாங்கிச் சென்றனர்.
கிலோ 400 ரூபாய்க்கு விற்ற கடையில் குவிந்த மக்கள் கூட்டம்.
நெல்லை மாவட்டம், அம்பை அருகே சிவந்திபுரம் பகுதியில் 2 மட்டன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் ஒரு மட்டன் ஸ்டால் தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிறது. அதனை முன்னிட்டு அதிரடி சிறப்பு சலுகையாக அப்பகுதியில் உள்ள மூன்று கிளைகளிலும் மட்டன் ஒரு கிலோ 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே பகுதியில் இதற்கு போட்டியாக இன்னொரு மட்டன் ஸ்டால் 4 -ம் தலைமுறையாக அடியெடுத்து வைப்பதால் அதிரடி சிறப்பு சலுகையாக ஒரு கிலோ மட்டன் ரூபாய் 400 க்கு விற்கப்படுகிறது. இங்கு வாரத்தின் அனைத்து நாட்களிலும் விற்கப்படுகிறது.
தற்போது உள்ள சூழலில் மட்டன் கிலோ ஒன்றுக்கு 700 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிவந்திபுரம் pakuthi மட்டன் கடைகளில் வாரத்தின் இறுதி நாளான நேற்று மக்கள் கூட்டம் மட்டன் வாங்க அலைமோதியது. தொடர்ந்து ஒரே பகுதியில் 2 கடைகளிலும் போட்டிப்போட்டு மாறி மாறி விலை குறைப்பு செய்து சிவந்திபுரம் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் அதிரடி சிறப்பு சலுகையை குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். மேலும் இந்த சுவரொட்டிகள் சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகின்றன.