சங்கரன்கோவில் அருகே புதிய மின்மாற்றியை எம்எல்ஏ துவக்கி வைப்பு
சங்கரன்கோவில் அருகே 100 கேவி திறன் கொண்ட மின்மாற்றியினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ துவக்கி வைத்தார்.;
சங்கரன்கோவிலில் 100 கேவி திறன் கொண்ட புதிய மின்மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்கு அழகு நாட்சியாபுரம் கிராமத்தில் சுமார் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் 100 k VA திறன் கொண்ட புதிய மின்மாற்றியை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக E.இராஜா MA BL சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மின்மாற்றியை இயக்கி வைத்தார்.
இதில் சங்கரன்கோவில் குருவிகுளம் பகுதிகளைச் சேர்ந்த செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.