சங்கரன்கோவில் அரசு கால்நடை மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு
சங்கரன்கோவில் அரசு கால்நடை மருத்துவமனையில் முட்புதர்கள் சூழ்ந்த பகுதியை எம்எல்ஏ ராஜா ஆய்வு செய்தார்.;
சங்கரன்கோவில் அரசு கால்நடை மருத்துவமனையில் முட்புதர்கள் சூழ்ந்த பகுதியை சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆய்வு செய்து உடனடியாக சுத்தம் செய்ய உத்தரவிட்டார்.
சங்கரன்கோவில் அரசு கால்நடை மருத்துவமனை பகுதியில் பல ஆண்டுகளாக பயனற்று கிடக்கும் பழைய கட்டிடங்களின் இடையே உள்ள பாம்புகள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்களை அச்சுறுத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா அப்பகுதியை ஆய்வு செய்து உடனடியாக சுத்தம் செய்ய உத்தரவிட்டார்.
மேலும் கட்டிடங்களுக்கு இடையே இருந்த பாம்புகளை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் சேர்த்திட ஊர்வன மீட்பு தன்னார்வ குழுவோடு இணைந்து கால்நடை மருத்துவமனை வளாகம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் லாலா சங்கரபாண்டியன், கால்நடை மருத்துவர் ரஹமத்துல்லா வார்டு செயலாளர் மார்த்தாண்டம், வழக்கறிஞர் நேரு, வீராசாமி, அழகுராஜா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ராயல் கார்த்தி, வழக்கறிஞர் சதீஷ் KSSM சங்கர் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.