சங்கரன்கோவில் புதிய பேருந்து வழித்தடத்தை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்
சங்கரன்கோவில் புதிய பேருந்து வழித்தடத்தை சட்டமன்ற உறுப்பினர் ராஜா தொடங்கி வைத்தார்.;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திருநெல்வேலி இடையிலான புதிதாக ஒன் டூ ஒன் அரசு பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் ராஜா பேருந்து ஓட்டி துவக்கி வைத்தார்.
சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு 1 டூ 1 அரசு பேருந்து சேவை வேண்டுமென பயணிகள் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவிடம் கோரிக்கை விடுத்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கையை நிறைவேற்ற ராஜா வேண்டுகோள் விடுத்தார்.
அதன் அடிப்படையில் இன்று சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு புதிதாக 1 டூ 1அரசு பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் ராஜா கொடியசைத்தும், பேருந்தை சிறிது தூரம் இயக்கியும் துவங்கி வைத்தார்.
சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், தொமுச நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
முறையாக கனக வாகனம் இயக்க சட்டமன்ற உறுப்பினர் ராஜாவிடம் உரிமம் இல்லாமல் பேருந்தை இயக்கியது, அது சார்ந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.