கால்நடை மருத்துவர்களுடன் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ஆலோசனை

கோமாரி தடுப்பூசி குறித்து, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, கால்நடை மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Update: 2021-12-01 11:15 GMT

கால்நடை மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா. 

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்,  சட்டமன்ற உறுப்பினர் ராஜாவுடன், கால்நடை மண்டல இணை இயக்குனர் ஆலோசனை நடத்தினார். உதவி இயக்குனர் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மருத்துவமனை மருத்துவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில்,  கடந்த இரண்டு ஆண்டுகளாக கோமாரி நோய் தடுப்பூசிகளை மத்திய அரசு கொடுக்காத காரணத்தினால் செலுத்தப்படவில்லை என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கால்நடைகளுக்கு பாம்புக்கடி ஏற்படும் நேரங்களில் தடுப்பூசிகள் அனைத்து கால்நடை மருத்துவமனைகள் இருப்பு வைத்திருக்கவும், மருத்துவமனை ரீதியாக தங்கள் தேவைகளை எழுத்து வடிவில் கோரிக்கை மனுவை வழங்கிடவும் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.

Tags:    

Similar News