மேலநீலிதநல்லூர் பகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து எம்எல்ஏ பரப்புரை
மேலநீலிதநல்லூர் பகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து எம்எல்ஏ, திமுக மாவட்ட செயலாளர் வாக்கு சேகரிப்பு.;
சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் திமுக மாவட்ட செயலாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் ஒன்றியம் கடையாலுருட்டி பகுதிகளில் கழக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் பாேட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த தென்காசி தெற்கு மாவட்டம் திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா அவர்கள் பரப்புரை செய்தார்கள். இந்நிகழ்வுனை ஒன்றியக் கழகச் செயலாளர் அ.ராஜா தலைவர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.