அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாகனத்தை திடீரென சோதனை செய்த அதிகாரிகள்..!

பாஜக வேட்பாளர் புகார் எதிரொலியால் அமைச்சர் உதயநிதி காரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை இட்டனர். அனால் பணம் ஒன்றும் இல்லை என தெரியவந்துளளது.;

Update: 2024-04-12 15:30 GMT

 அமைச்சர் உதயநிதி வாகனத்தை அதிகாரிகள் சோதனை செய்த போது எடுத்த படம்.

உதயநிதி ஸ்டாலினின் காரில் கட்டு கட்டாக பணம் இருப்பதாக பாஜக வேட்பாளர் குற்றம் சாட்டிய நிலையில், சங்கரன்கோவில் அருகே உதயநிதி ஸ்டாலினின் காரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

தென்காசி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரான ராணி ஸ்ரீ குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தென்காசிக்கு வருகை தந்தார். இந்த நிலையில், தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே பரப்புரையை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து, கடையநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் பகுதியில் ராணி ஸ்ரீ குமாருக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்.

தொடர்ந்து, அந்த வழியாக விருதுநகர் நோக்கி உதயநிதி ஸ்டாலின் சென்று கொண்டிருந்தபோது காட்டுமழை வாகன வாகன சோதனை சாவடியில் உதயநிதி ஸ்டாலின் காரை மறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரது காரின் பின்னால் சென்ற கார்களும் அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்ட நிலையில், இந்த சோதனையில் எந்த விதமான பணமும், ஆவணங்களும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.

இருந்த போதும், தென்காசி பாஜக வேட்பாளர் ஜான்பாண்டியன் உதயநிதி ஸ்டாலின் காரில் கட்டு கட்டாக பணம் இருப்பதாகவும், அவர் பணத்தை தென்காசி மாவட்ட வாக்காளருக்கு விநியோகம் செய்வதற்காக பணத்தை எடுத்து வந்துள்ளதாகவும் இன்று காலையில் குற்றம் சாட்டிய நிலையில், அவரது வாகனம் தற்போது சோதனையிடப்பட்டது  குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News