தென்காசி மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆய்வு
தென்காசி மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன் ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலைக்குமார் முன்னிலை வகித்தார்கள்.
பின்னர் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:
சங்கரன்கோவில் வட்டம், களப்பாகுளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-2022-ன் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் களப்பாகுளம் நாகல்குட்டி சிறுபாசன குளம் புனரமைப்பு பணிகளையும், வீரசிகாமணி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2021-2022-ன் கீழ் ரூ.10 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் கூடுதல் வட்டார நாற்றாங்கல் பணிகளையும், வீரசிகாமணி ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் 2020-21-ன் கீழ் ரூ.6.88 லட்சம் மதிப்பில் முடிவு பெற்ற நெகிழிகழிவு மேலண்மை மையத்தினையும், ரூ.21.55 லட்சம் மதிப்பில் முடிவுற்ற நுண் உரம் தயாரிக்கும் மையத்தினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2020-21-ன் கீழ் ரூ.21.33 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரின் பணிகளையும், கடையநல்லூர் வட்டம், பொய்கை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2020-21-ன் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினையும், வேலாயுதபுரம் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-22 -ன் கீழ் ரூ.9.36 லட்சம் மதிப்பில் முடிவுற்ற நடுக்காலனி ஊரணி புனரமைப்பு பணிகளையும், நயினாரகம் ஊராட்சியில், சமத்துவபுரம் புனரமைப்பு 2021-22 திட்டத்தின் கீழ் ரூ.57.69 லட்சம் மதிப்பில் முடிவுற்ற பெரியார் நினைவு புனரமைப்பு பணிகளையும், தென்காசி வட்டம், குத்துக்கல்வலசை கிராம ஊராட்சியில், தேசிய கிராம ஸ்வராஜ் இயக்கம் 2021-22 திட்டத்தின் கீழ் ரூ.9.60 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. லைஞர் அவர்களின் வழியில் பல எண்ணற்ற திட்டங்களை ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் முதல்வர் செயல்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஏழு ஆண் துப்புரவுப்பணியாளர்களுக்கு வேஷ்டி, சட்டையும், இருபது பெண் தூய்மைக்காவலர்களுக்கு சேலையும் வழங்கப்பட்டது.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரட்சி குழு தலைவர் தமிழ்செல்வி, உதவி இயக்குநர் (தணிக்கை) ருக்மணி, சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் .இராதா, கடையநல்லூர் ஒன்றியக்குழு தலைவர் சுப்பம்மாள், களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் சிவகாமி மற்றும் அனைத்துத்றை அரசு அலுவலர்களும் உடனிருந்தனர்.