சங்கரன்கோவிலில் மினி பஸ் - பைக் நேருக்கு நேர் மோதல்: 2 வயது சிறுமி படுகாயம்
சங்கரன்கோவிலில் பைக்- மினி பஸ் நேருக்கு நேர் மோதியதில் 2 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.;
சங்கரன்கோவில் அருகே மினி பஸ் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்-இராஜபாளையம் சாலையில் வாடிக்கோட்டை அருகே மாடசாமி, பட்டுக்கண்ணன், பவனி ஸ்ரீ, ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்றபாேது எதிரே வந்த மினி பஸ் மீது மோதியது.
இதில் மூவரும் பலத்த காயங்களுடன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 2 வயது சிறுமி பவனி ஸ்ரீ உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். முதற்கட்ட விசாரணையில் பட்டுக்கண்னன் மது போதையில் வாகனத்தை ஒட்டி சென்றது தெரியவந்துள்ளது.