சங்கரன்கோவிலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மில் தொழிலாளர்கள் போராட்டம்

சங்கரன்கோவில் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் மில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2021-10-01 07:45 GMT

சங்கரன்கோவில் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் மில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சங்கரன்கோவில் அருகே கூலி உயர்வு, 25வருடங்களாக பிடித்த செய்த தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் மில்லில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையன்குளம் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான நூற்பாலை மில்லில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் இருபத்தையிந்து வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர்களுக்கு நாள் ஒன்று சம்பளமாக ரூ.280 மட்டுமே தற்போது வரை வழங்கப்பட்டு வருதாகவும், சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகையினை இதுவரை வழங்கவில்லை.

இது சம்பந்தமாக மில் நிர்வாகத்தில் பலமுறை எடுத்து கூறியும் இதுவரை வரை நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மில் வாளத்தின் முன்பு அமர்ந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றாதபட்சத்தில் இந்த இடத்தை விட்டு செல்ல மாட்டோம் என தொழிலாளர்கள் தெரிவித்தனர். மேலும் தொழிலாளர்கள் போராட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News